Home செய்திகள் சேலம் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை – சேவை_பாதிப்பு..

சேலம் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை – சேவை_பாதிப்பு..

by Askar

சேலம் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை – சேவை_பாதிப்பு

இளம்பிள்ளை பிஎஸ்என்எல் அலுவல கத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் தொலைத்தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என வாடிக்கையாளர் குற்றம்சாட்டி உள்ளனர்.

சேலம் மாவட்டம் தொலைதொடர்பு நிலையத்திற்குட்பட்ட இளம்பிள்ளை பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் 2500-க்கு மேற் பட்ட தொலைபேசி இணைப்புகள் இருந்து வந்தன. இந்நிலையில் இளம்பிள்ளை, வேம்படிதாளம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி மூலம் ஜவுளி உற்பத்தி அதிக ளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இத்தொழிலுக்காக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஜவுளி வியாபார தொடர்புகளுக்கு (பிஎஸ்என்எல்) இணைய தள வசதி பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தது. காலப்போக்கில் தனியார் நிறுவ னங்கள் 4ஜி வழங்கி வந்த சூழ்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3ஜி சேவை யால் குறைந்த வேகத்தில் கிடைத்து வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் இணைப்பு கள் குறைந்து கொண்டே வந்தன. அதுமட்டு மில்லாமல் செல்போன் பயன்பாடு அதிகமிருப்பதால், லேண்ட் லைன் பயன் பாடு வெகுவாக குறைந்தது. தற்சமயம் வெறும் 350 இணைப்புகள் மட்டுமே உள்ளன. அதுவும் சில இணைப்புகள் பழுது அடைந்து புகார் தெரிவித்தால் சரி செய்ய பல நாட்கள் ஆகிறது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மீது வாடிக்கை யாளர்கள் அதிருப்தி அடைந்து வரு கின்றனர்.

மேலும் வேம்படிதாளம், திருமலைகிரி, ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட 7 கிளை அலுவலங்ளுக்கு தலைமை நிலைய மாக இளம்பிள்ளை பிஎஸ்என்எல் அலுவ லகம் செயல்பட்டு வருகிறது . இந்த அலுவ லகத்தில் 7 பேர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் 4 பேர் கட்டாய விருப்ப ஓய்வு பெற்றனர். மற்ற இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் தற்சமயம் ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார். மேலும் இளம்பிள்ளை சுற்றியுள்ள ஏழு கிளைகளுக் கான இணைப்புக்கு பழுது நீக்குவதற்கு ஒரே ஒருவர் மட்டுமே பணியாற்றி வரு கிறார். இதனால் இணைப்புகளின் மீது புகார் குறித்து கவனம் செலுத்த சூழ்நிலை உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பிஎஸ்என்எல் அலுவலகத்தில் போதிய பணியாளர்களை நீயமிக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!