Home செய்திகள் வறட்சி மாவட்டமாக அறிவித்து 2010முதல்2018 வரையிலான கரும்பு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கரும்பு விவசாயிகள் கோரிக்கை

வறட்சி மாவட்டமாக அறிவித்து 2010முதல்2018 வரையிலான கரும்பு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கரும்பு விவசாயிகள் கோரிக்கை

by mohan

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் கரும்பு தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டு ஒன்றிக்கு 4லட்சம் டன் வரை சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் தயாரிக்க கிரசர் ஆலைக்கும் இப்பகுதி விவசாயிகள் கரும்பை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 2010 முதல் 2018 வரையிலான கரும்பு சாகுபடி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது.பாலக்கோடு, ஜெர்த்தலாவ், பெல்ரம்பட்டி, கரகூர், மாரண்டஅள்ளி, சாமனூர், காவப்பட்டி, ரெட்டியூர், அனுமந்தபுரம், காரிமங்கலம், பந்தராஅள்ளி ஆகிய பகுதியில் கரும்பு சாகுபடி செய்து வரும் நிலையில் பருவமழை குறைவினால் நிலத்தடிநீர் 1000அடிக்கும் கீழ் சென்று விட்டது. பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தும்பலஅள்ளி அணை, செங்கபவுவன்தலாவ் ஏரி, ஜெர்த்தலாவ்ஏரி, தாமரை ஏரி என அணைகள் மற்றும் ஏரிகள் முற்றிலும் வறண்டு உள்ளது. இதனால் தொடர்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு மற்றும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். கரும்பு பயிர் செய்ய பொதுதுறை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியத நிலையில் விவசாயிகள் கூலி வேலைக்கு வெளிமாநிலத்திற்கு செல்லும் அவலநிலையில் உள்ளனர். மேலும் கரும்பு விவசாய கடனை திருப்பி வட்டியுடன் கட்ட வங்கி அதிகாôகள் தொடர்ந்து அச்சுருத்தி வருவதாக விவசாயிகள் பெரும் மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.நடப்பாண்டில் பருவமழை குறைவால் 4லட்சம் டன்னிலிருந்து 1லட்சம் டன் அறவையை நிர்ணித்துள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஒரு புறம் வறட்சியால் கரும்பு  நடவு பயிர்கள், நடுத்தர கரும்பு, அருவடைக்கு தயாரக இருக்கும் கரும்பு என அனைத்து பகுதியிலும் கரும்பு காய்ந்து வருகின்றது.ஒரு சில விவசாயிகள் மாடுகளுக்கு தீவணம் இல்லாதநிலையில் தங்கள் கடன் பெற்று கரும்பு விவசாயம் செய்த கரும்பு பயிர்களில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஆடு, மாடு என வறட்சின் காரணமாக இறக்கும் நிலையில் தள்ளப்படும். எனவவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தும், ஆடு, மாடுகளுக்கு இலவசமாக தீவனம் வழங்கவும், தொடர்ந்து கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!