Home செய்திகள் ராமநாதபுரத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடவடிக்கை கோரி எஸ்பி.,யிடம் பெண் மனு

ராமநாதபுரத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடவடிக்கை கோரி எஸ்பி.,யிடம் பெண் மனு

by mohan

இராமநாதபுரம் இந்திரா நகர் விஜயமார்த்தாண்டம் மனைவி அமராவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த கோரிக்கை மனு.எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த பிப்.4 இரவு 7:30 மணி அளவில் எனது வீட்டைச் சுற்றி 20 காலி பாட்டில்களை மூடி பகுதியில் துணியை கட்டி மர்ம நபர்கள் வீசி எரிந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினர். உடைந்த காலி பாட்டில்கள் எனது வீட்டு குளியலறை, திண்ணை என அனைத்து பகுதியிலும் சிதறி கிடந்தது. இதை கண்டு அலறியபடி வெளியே வந்து பார்த்தபோது சம்பந்தபட்ட நபர்கள் யாரும் இல்லை. குற்றவாளிகள் அப்பகுதியை விட்டு ஓடி விட்டனர். அதன் பிறகு பயந்தபடி நாங்கள் வீட்டை பூட்டி விட்டு, எனது அப்பாவை திண்ணையில் உறங்க வைத்து விட்டு நாங்கள் தூங்கினோம். இந்நிலையில் நள்ளிரவு 1:20 அளவில் எனது தந்தையை குறி வைத்து கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு ஒன்று வந்து விழுந்து வெடித்தது. அது எனது தந்தைக்கு அருகில் வந்து விழுந்து வெடித்தது. அதிர்ஷ்டவசமாக எனது தந்தை உயிர் தப்பினார்.இது குறித்து ஹலோ போலீசில் (83000 31100) புகார் அளித்தோம். எனது வீட்டு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு கிடந்த இடத்தை போட்டோ எடுத்துக்கொண்டு சென்றனர். எந்த நடவடிக்கை எடுக்காததால் நானும் எனது உறவினர்கள் ஐந்து பெண்கள் கேணிக்கரை காவல் நிலையத்தில் பிப்.5 மதியம் 2 மணிக்கு புகார் கொடுத்தோம் எங்கள் உயிர் உடமையை அழிக்கும் நோக்கில் கூட்டு சதி செய்து , பெட்ரோல் குண்டு வீசி எங்களை அச்சுறுத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!