Home செய்திகள் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு:-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.! 

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு:-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.! 

by Askar

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு:வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு:-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை அமைதி பேரணி செல்வதாக அறிவித்திருந்த நிலையில் கோபால் என்பவர் கையில் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் முதலாமாண்டு தகவல் தொடர்புத்துறை மாணவரான ஷதாப் நஜார் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதோ உங்களின் சுதந்திரம்” எனவும், டெல்லி போலீஸுக்கு ஆதரவாகவும் துப்பாக்கி வைத்திருந்த நபர் கோஷங்கள் எழுப்புவது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜனநாயக அடிப்படையில் ஜாமியா மில்லியா மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை காவல்துறை சில வன்முறை மூலம் ஒடுக்க பார்த்தது. காவல்துறையின் வன்முறை செயல்கள் அடங்கிய வீடியோ பரவியதால் அது தோல்வியை சந்தித்தது.

பாசிச பாஜகவின் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சுடுவதற்கு மக்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். ஒரு அமைச்சர் இது போன்ற வன்முறைக்கு அழைப்பது நாட்டை அழிவு பாதைக்கு தான் கொண்டு செல்லும். ஏற்கனவே துர்கா வாகினி என்ற பெயரில் பெண்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தவர்கள் இப்படி பேசுவதும், மத்திய அரசு வாய் மூடி இருப்பதும் மக்களுக்கு அரசின் மீது இருந்த நம்பிக்கையை குறைத்து வருகிறது.

இந்த வன்முறைக்கு மாணவர்கள் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருவது மத்திய அரசை கலங்கடித்துள்ளது. ஒரு மாணவி பேட்டி அளிக்கும் போது இதுபோன்ற அச்சுறுத்தல்களால் மாணவர்கள் தங்களின் உறுதியில் இருந்து பின் வாங்கி விடப் போவதில்லை” என்று தெரிவித்தது சுதந்திர வேட்கை மீண்டும் உருவாகியுள்ளதை உணர முடிகிறது.

CAA என்பது இந்தியாவின் ஆணி வேரான அரசியல் சாசன சட்டத்தை ஆட்டம் காணும் கருப்பு சட்டம் என்பதால் தான் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மத்திய அரசு மக்களின் மனநிலையை புரிந்து இந்த கருப்பு சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, இ.முஹம்மது, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!