Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சாத்தான்குளம் அரசு பள்ளியில் தேசியப் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்…

சாத்தான்குளம் அரசு பள்ளியில் தேசியப் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 24/01/2020 அன்று காலை 11.00 மணியளவில் தேசியப் பெண் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டு விழிப்புணர்வு எற்படுத்தபட்டது.

விழாவில் சாந்தி ஆசிரியர் வரவேற்று பேசினார். ஆசிரியர் செந்தில் வடிவேலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் செல்வராஜ் தலைமை ஏற்று வளரிளம் பருவ பெண்களுக்கான திட்டத்தை தொடங்கி வகித்து உரையாற்றினர்.

திட்டம் குறித்து ஆசிரியர் ஜெரோம் பேசியதாவது, , 14 முதல் 18 வயதுள்ள, 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, உடல்நலம்,மனநலம், பழகும் தன்மை, தன் சுத்தம், சுற்றுப்புறசுத்தம், ஆசிரியர் – மாணவியர் இடையே உள்ள உறவு ஆகியவை குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் திட்டம் ஆகும் எனக்கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மனநல ஆலோசகர் கலைவாணி மாணவிகளின் மனநலம், பிறருடன் பழகும் தன்மை குறித்து எடுத்துரைத்தார். உடல்நலமும் அதனை பேணிகாத்தலும் பற்றி உளவியல் ஆலோசகர் தஹ்மிதா பானு மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வழக்குரைஞர் மற்றும் சமூக ஆர்வலர் பிரின்சோ ரைமண்ட் மாணவிகளிடம் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், உரிமைகள், காவலன் செயலி,போஸ்கோ சட்டம் குறித்து விரிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இன்று தேசியப் பெண்குழந்தைகள் தினம் கொண்டாடும் வகையில் பெண்கள் அறிவை வளர்த்தல் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், தேக நலனே தேச நலன் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் மகளிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியம் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேச்சு போட்டியில் சுமதி, பூரணி, சபர்மதி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், கட்டுரை போட்டியில் நூருல் சிபாயா, செய்யது அஸ்லீனா, ஆர்த்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், ஓவியப்போட்டி யில் வி.ஹேமலதா, N. ஹேமலதா, பா. அர்ச்சனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்று பரிசு பெற்றனர். நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் நிஷா, புனிதா ராணி, யமுனா, கார்த்திகேயன், 9 முதல் 12 வரை பயிலும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிறைவாக ஆசிரியர் சாம்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் ஜெரோம் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!