72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் தொடக்கம்…

இராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ. வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். தாம் வாழும் பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கிலும், பசுமை மற்றும் இயற்கையுடன் மனித குலம் ஒன்றி வாழவேண்டும் என்னும் விழிப்புணர்வை தமிழக அரசு மற்றும் மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் தூவும் திட்ட தொடக்க விழா இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் இன்று (21.01.2020) நடந்தது.

இவ்விழாவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைகள் உருவாக்கும் திட்டத்தில் 2,500 மாணவ, மாணவியர் தலா 4 விதைகள் என 1.20 கோடி விதை பந்து உருவாக்கத்தில் இணைந்துள்ளனர் என்றார். மாவட்ட ஆட்சியரின் மகன் அர்னவ் வீர், (அமிர்தா பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவர்) விதைகள் தூவி மரங்கள் உருவாக்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா,  கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) எம்.பிரதீப் குமார், முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், இராமநாதபுரம் வட்டாட்சியர் வி.முருகவேல், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், பா.ஜீவா, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளர் சின்னதுரை அப்துல்லா, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா,முதல்வர்கள் ராஜமுத்து, ஜெயலட்சுமி, மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் மேலாண் இயக்குநர் முனைவர் லீமா ரோஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..