Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்?” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…

கீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்?” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…

by ஆசிரியர்

இன்றைய உலகில் முதன்மை மொழிகளாக கருதப்படும் இலத்தின், கிரோக்கம், அரபி, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தமிழுக்கு உலக அரங்கில் தனிச்சிறப்பு இருக்கிறது. மொழியின் இலக்கணம், இலக்கியங்களை உலக மொழிகள் பின்பற்ற தமிழ் மொழி அச்சானியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

இந்த தமிழ்மொழி உலகில் முதன்மை மொழி என்பதை திருக்குறள் முதல் பல தமிழ் இதிகாசங்கள் இன்றளவும் உலகிற்கு பரைசாற்றி வருகிறது.பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ் மொழியின் சிறப்பை துள்ளியமாக இனம் காட்டுகிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழ் யாருக்கு சொந்தம்? என்ற தலைசிறந்த ஆய்வு நூலை சகோதரர் செய்யது ஆப்தீன் அறிமுகம் செய்து இருக்கின்றார்.

இந்த நூலின் ஆசிரியர்  தமிழ் மொழி மீது தீராத பற்றுக்கொண்டவர். இன்றைய பத்திரிகை தர்மத்தை நிலைநாட்ட ஆபாசங்களை தவிர்த்து, சினிமா மாயைகளுக்கு அப்பாற்பட்டு, உண்மை செய்திகளை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் *சத்திய பாதை* மாத இதழுக்கு கௌரவ  ஆசிரியராக இருந்து இன்றைய பத்திரிகை தர்மத்திற்கு மணிமகுடமாக திகழ்கின்றார். இவர் ஊடக துறையின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தனி சிறப்பு.

இன்றைய உலகின் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புகளை இந்த நூல் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இன்றைய கிழக்காசிய நாடுகளில் அரசு மொழியாக வலம் வரும் நமது தமிழ் மொழியின் சிறப்புக்களை இந்த நூலில் எளிமையாக புரியும் படி வடிவமைப்பு செய்து இருப்பதை ஆசிரியர் கையாண்ட நடை அருமை.

இந்த நூலின் இளம் ஆசிரியர் அவர்கள் இன்னும் பல நூறு ஆதாரப்பூர்வமான ஆய்வு நூல்களை இந்த உலகத்திற்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன், என M U V முகைதீன் இப்ராகீம், செயலாளர், மக்கள் நல பாதுகாப்புக்கழகம், கீழக்கரை என்று குறிப்பிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!