வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் பொங்கல் விழா

2020 ஆம் ஆண்டுக்கான கலாம் கண்ட கனவு உறுதிமொழிகள் எடுப்பது, மதுரையை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவது மற்றும் முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு பொங்கல் சிறப்பு விருந்து வழங்கும் நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக மதுரை சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை வகித்தார்.இதில் அறக்கட்டளை நிர்வாகி முனைவர்.மாயகிருஷ்ணன் முன்மொழிய அப்துல்கலாமின் இலட்சிய கனவுகளை நிறைவேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் 14 முறை கின்னஸ் சாதனை படைத்த விஜய் நாராயணன் மற்றும் ஒரு முறை கின்னஸ் சாதனை படைத்த அவரது மனைவி சுருதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் சிலம்பம் தற்காப்புக் கலையில் மலேசியா சென்று கின்னஸ் சாதனை படைத்த சூரியா, சபேஷ் சகோதரர்களின் சிலம்ப நிகழ்ச்சி நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.பின்னர் முதியோர் இல்லத்தில் வாழ்வோர்க்கு பொங்கல் விழா விருந்து வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..