பள்ளி மாணவ மாணவிகளை மின்சாரம் தாக்கும் அபாயம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எல்லிஸ் நகர் சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் அருகே இரும்பினாலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இதில் மின் வயர்கள் தொங்கியபடி பீஸ்கேர் இவர்கள் பாதி வெளியே தெரிந்தும் மீட்டர்கள் தொங்கியுள்ளது. அதிகளவு வெளியே இருப்பதால் மாணவ-மாணவிகள் அதிகம் இந்த மின் கம்பத்தில் தொட்டு தான் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது .இதனால் மின்சாரம் தாக்க  வாய்ப்பு அதிகம் உள்ளது என புகார் எழுந்துள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த மின் கம்பத்தை சிமெண்ட் காங்கிரட் மின்கம்பத்தை நிறுவ வேண்டும் எனவும் மேலும் தொங்கிக் கிடக்கும் மின் வயர்களை சரி செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image