உசிலம்பட்டி அருகே எழுமலையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை முத்தையா நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த மக்கள் மருந்துக்கடையில் பொதுமக்கள் நலன் கருதி 100ரூபாய் மருந்து வெறும் 20ரூபாய்க்கும், அனைத்து மருந்துக்களுக்கு 60 முதல் 80 சதவிகிதம் வரை மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி, பாஜக மாநிலசெய்ற்குழு உறுப்பினர் பொன்.கருணாநதி, தொகுதி பாஜக செயலாளர் சந்திரமோடி மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..