போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது – மத்திய அரசு.! 

போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது – மத்திய அரசு.!

மோட்டார் வாகனச் சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை மாற்றுவதற்கோ குறைப்பதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த செப்டம்பரில் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் என அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

குஜராத், கர்நாடகா, மணிப்பூர், உத்தரகாண்ட் அரசுகள் அபராதத் தொகையைக் குறைப்பதாக அறிவித்தன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் அபராதங்களை குறைப்பதற்கு சட்டம் இயற்றவோ நிர்வாக நடவடிக்கை எடுக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image