மண்டபம் பேரூராட்சி பகுதியில் 50 ஆயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதியை பசுமையாக்கும் நோக்கத்துடன் 50 ஆயிரம் மரக்கன்று நடும் பணியை செயல் அலுவலா் ச.மாலதி தொடங்கி வைத்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ரா.ராஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் மண்டபம் பேரூரட்சி பகுதியை பசுமையாக்கும் நோக்கத்துடன் 50 ஆயிரம் மரக்கன்று நடும் பணியை செயல் அலுவலா் ச.மாலதி தொடங்கி வைத்தாா்.

அவர் கூறுகையில், பேரூராட்சியில் உள்ள 18 வாா்டு பகுதியை பசுமையாக்கும் நோக்கத்துடன் 50 ஆயிரம் மரக்கன்றுகள் தொடா்ந்து நடப்பட்டு அதனை முழுமையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜாகீர் உசேன், பணியாளர்கள் பரிமளம், ஜோதி லட்சுமி, சேதுராமன், சோணைமுத்து, மலைச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image