பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு, நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் அருகில் இருந்து அரசு மருத்துவமனை தாலுகா அலுவலகம் செல்லும் பொதுமக்கள் நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு?இதனால் இந்த நடைபாதையில் நடக்கும் உடல் நலம் பாதிக்கபட்ட பொதுமக்கள் பாதிப்பு?இது குறித்து பல முறை புகார் அளித்தும் நாளிதழில் செய்தி வெளியிட்டும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமலும் கண்டு காணாமல் வாகன ஓட்டிகளுக்கு ஆதரவாக செயல்படும் உதகை நகராட்சி துறை?பல காலமாக பொதுமக்கள் நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற உதகை நகராட்சி நடவடிக்கை எடுக்குமா ? அல்லது பொது மக்கள் நடக்கும் போது வாகன. இடையூறு தொடருமா? நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறது உதகை நகராட்சி? அல்லது உதகை நகராட்சி அதிகாரிகள் வேலையினை யாரேனும் தடுக்கிறார்களா?பொதுமக்கள் நலமாக. வாழ சிறப்பாக. சமுதாய சேவை ஆற்றி வரும் நீலகிரி மாவட்ட. ஆட்சியர் அவர்கள் இந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கபட்டோர் ஆகியோர்களின் நிலையினை எண்ணி பொதுமக்களின் நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள இருசக்கர. வாகனங்களை அகற்ற உதவ வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

நீலகிரி மாவட்ட. நிருபர் ரமேஷ்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image