500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவின் பேரில் B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் .லோகேஸ்வரி மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவர்களுக்கு கிடைத்த தகவலின் ரகசிய தகவலின் படி மதுரை டவுன் மீனாட்சி கோவில் தெரு, ஓதுவார் சந்தின் அருகில் வெள்ளை நிறசாக்கு பைகளுடன் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சாக்குப்பையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பிரவீன்குமார் ஜெயின் 34 என்பவரை கைது செய்து அவரிமிருந்து (1) விமல் பான்மசாலா 50 பாக்கெட்டுகள் – 24 மூடைகள், கணேஷ் புகையிலை – 1 மூடையும், கூல் லிப் புகையிலை (பெரியது)- 12 மூடைகளும், கூல் லிப் புகையிலை (சிறியது) – 1 மூடையும், சைனி டொபாக்கோ – 1 மூடையும், RMD பான்மசாலா – 1 மூடையும், ரஜினிகாந்தா பான்மசாலா – 1 மூடையும், தான்சந்த் பான்மசாலா – 1 மூடையும், (மொத்தம் சுமார் 500 கிலோ எடையுள்ள 42 மூடைகளும்) புகையிலை விற்பனை முகவர்களுக்கு ஊக்கமளிக்க கொடுத்த வெள்ளி காசுகள் (5gm-2, 10gm-2, 15gm-1 மொத்தம்-5) -ம் கைப்பற்றி பிரவீன்குமார் ஜெயினை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினார். மேலும் மதுரை மாநகர் முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனை செய்யவும் காவல் ஆணையர் அவய்கள் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image