Home செய்திகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

by mohan

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஆர்வத்துடன் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 30ம் தேதி நடை பெற உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னமாயன் மகள் இளம் பெண் பிரியா (22) வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பெரிய அரசியல் வாதிகளே தேர்தலில் போட்டியிட அச்சப்படும் போது இந்த இளம் வயது பெண் பிரியா தைரியமாக தேர்தல் களத்தில் இறங்கிய சம்பவம் அரசியல் வதிகள், அதிகாரிகள், பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இளம் பெண் பிரியா கூறும் போது கிராம மக்களின் நலனுக்காக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!