திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மலை மீதுதீபம் ஏற்றும் கொப்பரை தயார் நிலையில் கோவிலுக்கு வந்தடைந்தது

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரும் 10 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது 10ம்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் உள்ள கருவரையில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும் இதனை காண உலகெங்கிலும் இருந்து 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது கார்த்திகை தீபத் திருவிழாவிற்க்கு முக்கிய நிகழ்வான மகாதீபத்திற்க்கு தீபம் ஏற்றும் செம்பினல் ஆன 5.3 அடி உயரமும் 3.5 அகலமும் கொண்ட கொப்பரை அண்ணாமலையார் கோவிலில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கொப்பரையைத் தொட்டு வணங்கினர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image