வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம் மீட்பு

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இதில் 50 வருடத்துக்கு மேலாக பெண்மணி ஒருவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த இடத்தை அந்தப் பெண்மணி உள்வாடகைக்கு பல லட்ச ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்தனர். இது மதுரை வீட்டு வசதி வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது .இதில் 48 மணி நேரத்திற்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினார்கள். சுமார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலம் மீட்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..