தொடரும் விபத்து அவதிப்படும் காவல்துறை மற்றும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் மத்திய சேமிப்பு கிடங்கு அருகே சாலையில் சுமார் 30 அடி நீளத்திற்கு மேல் சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதை சரியாக மூடாத காரணத்தினால் கடந்த சனிக்கிழமை ஒரு பேருந்து கவிழ்ந்தது. மேலும் அதில் இரண்டு மூன்று கார்  சிக்கியுள்ளது. இந்த நிலையில்  பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சுமாரா ஆறு அடி பள்ளத்தில் சிக்கியது .இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். துரிதமாக செயல்பட்ட ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளை விரைவாக கீழே இறங்கி விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்பு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து மீட்டனர். எனினும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..