உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டியில் சேதமடைந்துள்ள நாடகமேடையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சட்;டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ3லட்சம் மதீப்பீட்டில் நாடகமேடை அமைக்கப்பட்டன. ஆனால் தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டப்படாததால் கட்டிமுடிக்கப்பட்டு சில காலங்களிலேயே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தரைதளம் அமைப்பதற்கு கற்கள், மணல் போன்றவைகளை வைத்து சமன்செய்யாததால் டைல்ஸ்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த நாடகமேடை சேதமடைந்து காணப்படுவதால் எப்போதும் இடிந்துவிழும் அபாயம் என பொதுமக்கள் பயன்படுத்த அச்சம் தெரிவிக்கின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேதமடைந்துள்ள கட்டிடத்தை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image