பள்ளி மானவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் இடைநீக்கம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ளது வெள்ளி சந்தை கிராமம். இக்கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் கணித ஆசிரியர் பிரகாஷ் குமார் (54) என்பவர்  6ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு மாணவியிடம்  தொடர்ந்து சில்மஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அம்மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்தது மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரி மற்றும் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோரிடம் புகார் அளித்தனர் .ஆனால் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும்  ஆசிரியர் பிரகாஷ் குமார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய கோரி கோஷமிட்டனர். இதனையறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோர் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவேல் சம்மந்தபட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதாக உறுதி அளித்தார் .அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image