சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் அனைத்து வாகனங்களும் கவிழ்ந்து விபத்து

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் காவல் நிலையம் அருகே சுமார் 30 அடி அளவிற்கு நீளம் கொண்ட பள்ளம் ஒன்று உள்ளது. இது 3 அடி ஆழத்திற்கு மேல் உள்ளது. இதில்இரவு ஒரு காரும் பேருந்து மாட்டிக்கொண்டது. தற்போது ஒரு அரசு பேருந்து பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அந்த பள்ளத்தில் மாட்டிக் கொண்டதால் அப்பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. விரைந்து வந்த காவல்துறையினர்  போக்குவரத்துக்கழகதுறையினர் மீட்டும்  அந்த வாகனத்தை மீட்க முடியவில்லை. உடனடியாக அருகில் உள்ள ராட்சத கிரேன் மூலமாக அந்த பேருந்தை மீட்டனர் விரைவாக செயல்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பகல் நேரத்திலேயே இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படுவது தேசிய நெடுஞ்சாலை துறையின்மெத்தனப் போக்கையே காட்டுகிறது என தெரியவருகிறது. சுமார் மூன்று அடி ஆழத்திற்கு பள்ளம் இருப்பது தேசிய நெடுஞ்சாலை துறைக்கு  தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரும் அந்த பள்ளத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image