நிலக்கோட்டையில் மின் கம்பத்தில் இருந்து தவறிவிழுந்து தற்காலிக மின் ஊழியர் பலி.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தற்காலிக மின் ஊழியராக கே.குரும்ப பட்டியைச் சேர்ந்த சோமு பட்டர் மகன் ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்,  நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி எதிரே அமைந்துள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார், அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ஜெயராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இறந்த ஜெயராஜுக்கு 3 பெண் குழந்தைகளும், மனைவி மகாலட்சுமியும் உள்ளார்கள்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..