செங்கத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் மில்லத் நகர் பகுதியில் குப்பநத்தம் கூட்டு சாலையில் அருகே சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த குளத்தை தனிநபர் ஒருவர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தினை வியாபார நோக்கில் கடை அமைத்து மரம் இழைக்கும் தொழிற்சாலை அமைத்து நடத்த முயற்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் அதன் அருகிலே கோயிலும் உள்ளது அதனை முழுவதுமாக இடித்து தள்ளியும் குளத்தை முழுவதுமாக மூடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் மில்லத் நகர் பகுதி மக்கள் பயண்படுத்தும் கழிவுநீர் முழுவதுமாக வெளியேறும் கழிவுநீர் கால்வாயை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கால்வாயை முழுவதுமாக மூடி கழிவுநீர் செல்ல வழியின்றி அங்கேயே தேங்கி நிற்கின்றது. இதனால் அங்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் பயணிகள் நின்று செல்லுமிடத்தில் கழுநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் அங்கு துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மினி டேங்க் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுளுள்ள நபர்களால் அகற்றப்பட்டு அங்கு குடிநீருக்காக அமைக்கபட்ட ஆழ்துளை கிணரை முழுவதும் மூடி குடிநீருக்காக வைக்கபட்ட டேங்கை முழுவதுமாக அப்புறப்படுத்தும் நோக்கில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பழமைவாய்ந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நபர் மீது நெடுஞ்சாலைத்துறையில் வருவாய்த் துறையும் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுவாக கொடுத்தும் தற்பொழுது வரை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தனி நபருக்காக அதிகாரிகள் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் நீர்நிலை பகுதிகளை பாகதுகாத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளையும் மீட்டெடுத்து நீராதாரத்தை உருவாக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட ஆட்சியர் தனிநபர் ஒரு குளத்தையே முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து கழிவுநீர் கால்வாயைத் துருத்து மக்களுக்கு விரோதமான செயலில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image