7-ஆம் வகுப்பு மாணவனின் மூக்கில் நுழைந்த மீன்-அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே மண்ண வேளம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள் குமார் அங்குள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பகுதியில் இருக்கும் கிணற்றில் அருள் குளிக்கும் போது அவரது மூக்கிற்குள் எதோ சென்றது போல் உணர்ந்துள்ளார்.இதனால் அவரது மூக்கில் வலி எடுத்துள்ளது. அவரால் எடுக்கவும் முடியவில்லை. வலியால் துடித்தார். பெற்றோர் உடனடியாக அருள் குமாரை அன்னவாசலில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அருள் குமாரை மருத்துவர் கதிர்வேல் பரிசோதனை செய்தார். அப்போது அவரது மூக்கில் எதோ இருப்பதைப் பார்த்தார். உடனே மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் மூக்கில் இருந்த மீனை வெளியே எடுத்தனர். இதையடுத்து, அந்த சிறுவனுக்கு மூக்கில் இருந்த வலி நீங்கியது.மூக்கிற்குள் செல்லும் அளவில் அந்த மீன் இல்லை என்றாலும், எப்படி அவ்வாறு சென்றது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கிணற்றில் குளித்துக் கொண்டு இருக்கும்போது, அவரது மூக்கில் மீன் சென்று இருக்கிறது. அந்த மீனை வெளியே எடுக்க சிரமமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்      அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..