இராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்

சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசுசிறுசேமிப்பு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் பொதுமக்களிடத்தில், சிறுசேமிப்பு முகவர்கள் மூலம் அஞ்சலக சிறுசேமிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சிறுசேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக சிக்கன நாளையொட்டி (30.10.19), சிறுசேமிப்பு துறை மூலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி னார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.வீரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..