தேசிய கல்வி தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு இதம்பாடல் அரசுஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் மற்றும் கம்பி வலைகள் மக்கள் பாதை சார்பாக அன்பளிப்பு அளிக்கபட்டது.அதில் தலைமை ஆசிரியை கெளரி வரவேற்று, ஆசிரியர்கள் பாண்டி, வினோத், ஆசிரியை சுதா, சூரியபிரபா ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பாதை தோழர்களை மரக்கன்றுகள் நடுவதற்கு சிறப்பாக வரவேற்று சிறப்பித்தனர்.இராமநாதபுரம் மாவட்ட கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினி காந்த் தலைமை தாங்கி, மக்கள் பாதை பொறுப்பாளர் கனகசபாபதி மற்றும் தோழர்கள் பிரபுகுமார்,கலைச்செல்வன், கலைமோகன்,அரவிந்த் ராஜ்,இராமர் ஆகியோர் மரக்கன்றுகள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடுவதற்கு உதவி செய்தனர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image