இதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக மட்டுமல்லாமல் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியமைத்து 75 சதவிகித விழுக்காட்டை பெற்று வெற்றிபெறுவது உறுதி என பாஜக மாநிலதுணைத்தலைவர் பி.டி.அரசக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின்ரோட்டில் பாஜக பிரமுகரின் ஹோட்டல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அரசக்குமார் கலந்தகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அரசக்குமார் உள்ளாட்சி தேர்தலில் பாஜக மட்டுமல்லாமல் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, சமுத்துவ மக்கள் கட்சி தேமுதிக உட்பட் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாகவும், இதில் அதிமுக 75 சதவிகித விழுக்காட்டை பெற்று வெற்றிபெறுவது உறுதி எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி தொகுதி பாஜக பொறுப்பாளர் தீபன்முத்தையா, மற்றும் பாஜக நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image