இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பில் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் எம்.ரியாஸ் கான் தலைமை வகித்தார். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் எம்.நியாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மாநில பேச்சாளர் பசீர், இராமநாதபுரம் செய்தியாளர் சங்கத் தலைவர் கி.தனபாலன், ராம்நாட் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் எம்.ஹாஜா அஜ்மீர்தீன், விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் மாநில துணைத்தலைவர் எம்.உம்முல் தவ்லத்தியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கல்வி நிலையங்களில் படிக்கும் 36 மாணவ, மாணவி யருக்கு ரூ.2.5 லட்சம் நிதி காசோலை வழங்கப்பட்டது.அக்சஸ் இந்தியா மாநில பயிற்சியாளர் எம்.சீனி இப்ராஹீம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சமூக மேம்பாட்டு துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply