ஹெல்மெட் பரிதாபங்கள், போலீசார் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.!

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகில் காவல்துறையினரால் மூதாட்டி பலி.

ஹெல்மெட் அணியாமல் கச்சிராயபாளையத்தில் இருந்து செந்தில் மற்றும் அவரது பாட்டி அய்யமாள் இருவரும் வந்து கொண்டு இருந்தார்கள்.

வழிமறித்த போலிசார் லத்தியை சுழற்ற அவர் குனிந்து கொள்ள பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் மீது பட்டு நிலைதடுமாறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அய்யம்மாளின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் ஆகையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும்,வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி அய்யம்மாள்(63) என்பவர் உயிரிழந்ததை அடுத்து 5 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான 5 காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image