Home செய்திகள் வாழ்வாதார கோரிக்கை.! எங்கள் மீதும் கருணை காட்டுங்கள், அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.!

வாழ்வாதார கோரிக்கை.! எங்கள் மீதும் கருணை காட்டுங்கள், அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.!

by Askar

இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!

மத்தியஅரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் இலவச மற்றும் கட்டாயக்கல்வியை மேம்படுத்திட பகுதிநேர ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதற்கான நிதி பங்கீடு மத்தியஅரசு பங்கு 65 சதவீதம் என்றும், தமிழ்நாடுமாநில அரசு பங்கு 35 சதவீதம் என்ற விகிதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தை தமிழ்நாடு மாநிலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 26.8.2011ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி நியமித்துக்கொள்ள ஆண்டொன்றுக்கு 99கோடியே 29 இலட்சம் நிதி ஒதுக்கி அறிவிப்பினை வெளியிட்டார்.

பின்னர் இதற்கான அரசாணை வெளியிட்டு அதன்படி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பணிவழங்கப்பட்டது.

பணியில் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் 110 அறிவிப்பில் நிதிஒதுக்கியபடி அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கி இருக்கவேண்டும்.ஆனால் பள்ளிநடைபெறாத கோடைகால விடுமுறையான மே மாதம் சம்பளம் தராமல் விட்டுவிட்டனர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக இதுவரை ஒவ்வொருவரும் ரூபாய் 53ஆயிரத்து 400ஐ இழந்து வருகிறோம். பணிநியமன அரசாணையிலும் மே மாதம் சம்பளம் கிடையாது என்று ஆணையிடப்படாதபோது ஆண்டுக்கு ஒருமாதம் சம்பளம் மறுக்கப்பட்டுவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 11 மாதங்களுக்கு மட்டுமே வேலை, 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் என அரசாணை வெளியிட்டிருந்தால் இத்தனை ஆயிரம்பேர் இவ்வேலையில் சேர்ந்திருக்கவே மாட்டார்கள். இதில் எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.எனவே இதனை சரிசெய்து தராமல் விடுபட்டுள்ள மே மாதம் சம்பளத்தினை அனைவருக்கும் நிலுவைத்தொகையாக தரவேண்டும் என தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் இழந்துவரும் நிலையில் ஊதிய உயர்வும் கடந்த எட்டு கல்வி ஆண்டுகளில் முதல்முறையாக 2014ல் ரூ.2ஆயிரமும், பின்னர் 2017ல் எழுநூறு ரூபாய் உயர்த்தியதால் ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக தற்போது பணியில் உள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரம் சம்பளம் மற்றும் மகப்பேறு விடுப்பு தற்செயல்விடுப்பு இபிஎப் தரும்போது தமிழ்நாடு மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அதே சம்பளத்துடன் இதர சலுகைகளும் தருவதே நியாயமானது என கேட்டு வருகின்றனர்.

பகுதிநேரமாக பணிபுரிய ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும் ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது அரசின் உத்தரவின்படி முழுநேரமாக பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றனர். பள்ளி நடத்தும் அனுபவமும் மற்றும் நிரந்தரப்பணிக்கு அரசு கேட்கும் கல்வித்தகுதியும் உள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழகஅரசு புதிய அரசாணை பிறப்பித்து அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரம் வேலை வழங்கி சம்பள உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்டும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என முறையிட்டு வருகிறோம். இதில் மேலும் காலதாமதம் செய்யாமல் சொன்னதை செய்ய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முன்வரவேண்டும்.

9 கல்விஆண்டுகளாக ரூ.7700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மனிதநேயத்துடன் மத்தியஅரசின் திட்டவேலையில் இருந்து தமிழகஅரசுப் பணிக்கு மாற்றி அனைவரின் குடும்பநலன் வாழ்வாதாரம் காக்க உதவிட வேண்டும்.

கருணை மனு, 8 அம்ச கோரிக்கை மனு மற்றும் 8 வருட கோரிக்கை மனு மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்விமுதன்மைச்செயலர், மதிப்புமிகு ஒருங்கிணைந்தகல்வி மாநிலதிட்டஇயக்குனர் அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளோம். கோரிக்கைகளை அட்டவணைகளாக கொடுத்துள்ளோம். இப்போது வாழ்வாதார கோரிக்கை மனுவினை அனுப்பி வருகிறோம். இதனை கருணையுடன் பரிசீலித்து வாழ்வளிக்க வேண்டுகிறோம் என்று கோரியுள்ளார்

சி.செந்தில்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு செல் நம்பர் : 9487257203

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!