Home செய்திகள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் “கீழடி” அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சி, கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்.!

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் “கீழடி” அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சி, கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்.!

by Askar

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் கீழடி அகழாய்வுப்   கண்காட்சியை வீடியோ கான்பரசிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 5 கட்ட அகழாய்வு நடந்து முடிந்துள் ளது. சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட் கள் கண்டறியப்பட்டுள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான கீறல் எழுத்து, பானை ஓடுகள், சுடு மண் காதணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் செங்கல், உறை கிணறு, சுற்றுச்சுவர், நீர் மேலாண்மை தொடர்பான முக்கிய பொருட்கள் கிடைத் துள்ளன. இவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும். கீழடி அகழாய்வு பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனத் தொல்லியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அகழாய்வுப் பொருட்களை பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பய ணிகள் உள்ளிட்டோர் பார்க்க தற்காலிக அருங்காட்சியகத்துக்கு தொல்லியல் துறை ஏற் பாடு செய்துள்ளது.

இதன்படி, மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் முதல் மாடியில் 3 அறைகளில் அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.இதன் தொடக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி சென்னையிலிருந்து வீடியோ கான்பரஸிங் மூலம் கண்காட்சிக் கூடங்களை திறந்து வைத்தார். இதுகுறித்து கீழடி அகழாய்வின் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் கூறியதாவது: தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 84 குழிகளில் 6,820 தொல் பொருட்கள், பெரிய அள விலான கட்டடப் பகுதிகள் கிடைத்துள்ளன. தமிழ் எழுத்து பொறித்த மட்கல ஓடுகள், குறியீடு, சங்கு வளை யங்கள், காசுகள், சுடு மண் விலங்கு, மனித உருவங்கள், விளையாட்டுக் காய்கள் கிடைத்தன.4, 5-ஆம் கட்ட ஆய்வில் கிடைத்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக 3 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. காலை11 முதல் இரவு 7 மணி வரை அனைத்து நாட்களிலும் பார்க்கலாம். கட்டணம் எது வுமில்லை. தொல் பொருட் கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற் காலிகமாகத் தொடங்கப்பட் டுள்ள இக்கண்காட்சியை, மக்கள் வருகையைப் பொறுத்து நீட்டிக்க முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

மதுரை, கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!