திமலை நகரத்தில் முப்பெரும் விழா

பாஜக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் திமலை நகரத்தில் காந்திபிறந்தநாள் விழா, படேல் பிறந்தநாள்,சீனஅதிபர் வருகை உள்ளிட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சியில் நரசிம்மன் Ex.mp சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின் செய்தியாளர் சந்திப்பின்போது அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பத்துநாள் உற்சாகத்திற்கு யானையை திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார். உடன் மாநில விவசாய அணி செயலர் ஏஜி காந்தி,முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன்,தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நேரு தலைமை வகித்தார்.. பொது செயலாளர்கள் ஜீவானந்தம்,சேகர், நிகழ்ச்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர் சதீஷ்குமார், விழுப்புரம் கோட்ட அமைப்பு செயலர் குணசேகரன், மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் செந்தில்முருகன், கல்வியாளர் பிரிவு தலைவர் மூவேந்தன்,Sc அணி தலைவர் முருகேசன், நகர பொது செயலளார்கள் ஆறுமுகம்,வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image