இராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணை

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.10.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கினார்.தமிழக அரசு துறைகளில் பணியாற்றி, பணிக்காலத்தில் உயிரிழக்கும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 6 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவு ராவ், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டுமென அறிவுரை வழங்கினார். மேலும், புதிதாக பணியில் சேரவுள்ள இந்நபர்களுக்கு ஒரு வார கால புத்தாக்க பயிற்சி வழங்கிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உடனிருந்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image