முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (21/10/2019) காலை 10.30 மணியளவில் தீயணைப்புத் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியிணை ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் மாணவிகளிடம் நெருப்பு என்பது பொருளையும், உயிரையும் சேதப்படுத்தும் எனவே நாம் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வரவேற்புரை ஆற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் திரு.S. ராஜேந்திரன், தீயணைப்புத் துறை அலுவலர், இராமநாதபுரம், அவர்களுக்கு பொன்னாடை வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடுவோம், நமக்கு நாமே விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றும் தன்னலமில்ல துறை தீயணைப்பு துறை என்று சிறப்புரை ஆற்றினார். மாணவிகளுக்கு செய்முறை வழியாக வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய் பாத்திரங்கள், சமையல் எரிவாயு போன்றவற்றில் தீ அணைக்கும் முறையையும், தீ அணைக்கும் கருவிகள் பயன்படு்த்தும் முறைகளையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திருமதி P.பிரியங்கா நன்றியுரை ஆற்றினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..