தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டை பறிமுதல். 3 பேர் கைது

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனசரகர் வெங்கடேஷ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி அருகே சேராங்கோட்டையில் சோதனை நடத்தினர். அப்போது புலித்தேவன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 150 கிலோ பதப்படுத்திய கடல் அட்டை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. ரூ 10 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கடல் அட்டையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்ததையடுத்து கடத்தல் தொடர்பாக முருகேசன், சக்திவேல், முருகையா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..