ஏர்வாடி அருகே மழை வேண்டி முளைப்பாரி விழா

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தொத்தமகன் சாவடி ஷத்திரிய இந்து நட்டாத்தி நாடார் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் 4 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா அக்.8 ஆம் தேதி காப்பு உடன் தொடங்கியது. வாலிபர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் 6 நாட்கள் நடந்தன. அக்.15 இரவு, வல்லபை விநாயகர் கோயில் பகுதியில் இருந்து அம்மன் கரகம் எடுத்து கோயிலை வந்தடைந்தது. மாரியூர் நம்புவேல் குழுவினரின் கும்மிபாட்டு, மணப்பாறை பல்சுவை கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பருவ மழை செழித்து விவசாயம் தழைக்க வேண்டியும், உலக நன்மை வேண்டி, கோயில் வாசல் முன் இன்று காலை பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும், முடி காணிக்கை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை ஒயிலாட்டத்திற்கு பின் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஏர்வாடி தர்காவை வலம் வந்து கடலில் கரைக்கப்பட்டது. நாடார் உறவின் முறை தலைவர் பி.பூவன், உப தலைவர் ஆர்.நீலமேகம், செயலாளர் எம்.மங்கள சாமி, உதவி செயலர் எம்.கொப்புளான், பொருளாளர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..