கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்மருத்துவ பரிசோதனை முகாம்………

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர் தலைமையிலும், பட்டயத்தலைவர் அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமையாசிரியர் ஹமீது நிஷா, பல் மருத்துவர்கள் சக்திகுமரன், சில்மியா ஜெயம் அன்பு, ஹபீஷா பாத்திமா மற்றும் ரோட்டரி சங்க செயலாளர் செய்யது முகம்மது ஹசன், தவமணி, மூர் ஹசனுதீன், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

இவர்களை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம் வரவேற்றார். மேலும் முன்னாள் மாணவர்கள் பாசக்கார பசங்க குழுவினரும் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image