ஆரணி – ஒரே நாள் இரவில் இரு கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பாட்ஷா உடையார் தெருவில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒரே நாள் இரவில் இந்த இரண்டு கோவில்களின் வெளிகேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 20000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் முக்கிய மையப்பகுதியாக உள்ள இடத்தில் துணிகரமாக கோவில் உண்டியலை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த இரண்டு கோவில்களின் உண்டியல்களை உடைத்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் திருட்டை தடுக்கக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். திருடுபோனது குறித்து தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசார் விசாரனை செய்து தேடி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..