Home செய்திகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பயன்பாடற்று கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை

கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை அனைத்து பேருந்து நிலையம் மற்றும் பொதுஇடங்களில்அமைக்கப்பட்டது…இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இத்திட்டம் காலப்போக்கில் பயன்பாடற்று இன்று குடி மக்கள் கூடாராமகவும், பாதுகாப்பற்ற ஓர் இடமாகவும் மாறியுள்ளது…

மேலும் இந்த அறையில் குடிநீர் சுத்தமாக இல்லை எனவும், இந்த அறையில் உள்ள கழிவறை நகராட்சி துடப்பங்கள் வைத்து எடுத்துச் செல்லும் குடோனாக உள்ளது நமது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் இந்த அறையின் ஒரு பகுதி கண்ணாடி உடைக்கப்பட்டு கிழிந்த ப்ளக்ஸ் போர்டு வைத்து மறைக்கப்பட்டிருப்பதும், வெளியில் இருந்து பார்த்தால் உள்பகுதி முழுமையாக தெரியும் அவல நிலையால் தாய்மார்கள் யாரும் இந்த அறைக்கு பாலூட்ட வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மேலும் இந்த அறையின் அருகே குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்லும் அவலமும் நிகழ்கிறது.நகராட்சி நிர்வாகம் தலையிட்டு இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை செப்பனிட்டு மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!