நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிக்காக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அதை தொடர்ந்து அதிமுக வினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image