மண்டபம் ஓடைத்தோப்பு அம்மன் கோயில் 73 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஓடைத் தோப்பு சந்தன பூமாரி அம்மன் கோயில் 73 ஆம் முளைப்பாரி விழா செப். 22 ல் முத்தெடுத்து, செப்.24 மாலை காப்பு கட்டி முத்து பரப்பி தொடங்கியது. இதனையொட்டி தினமும் இரவு வாலிபர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. அக்.1 இரவு 9:25 மணியளவில் அம்மன் கரகம் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 11:20 மணியளவில் கோயில் வந்தது. இதனை தொடர்ந்து முளைப்பாரி சுமந்து பெண்கள் கோயிலை 3 முறை சுற்றி வந்தனர். அக்.2 காலை அம்மன் கரகம் , பக்தர்கள் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. இதனையடுத்து விரதமிருந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வி.செந்திவேல் தலைமையிலான ஒயிலாட்டக்குழுவினர் சக்திவேல், காமேஸ்வரன், முனீஸ்வரன் ஆகியோர் கோயில் விழாக்குழு சார்பில் கவுரவிக்கப்பட்டனர். கோயில் பூசாரி என்.பூவேந்திரன், விழாக்குழு உறுப்பினர்கள் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் ஏ.சிவக்குமார் ஆகியோரை ஒயிலாட்டக் குழுவினர் கவுரவித்தனர். மாலை நேர ஒயிலாட்டத்திற்கு பின் சந்தன பூமாரிஅம்மன் மின்னொளி அலங்காரத்துடன், முளைப்பாரி சுமந்த பெண்களுடன் அம்மன் கரகம் வான(ண) வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட , திண்டுக்கல் சுப்ரமணி குழுவினரின் பேன்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு கடற்கரையில் கரைக்கப்பட்டது. விழா குழு நிர்வாகிகள் ஐ.துரைக்கண்ணு (ரயில்வே ஓய்வூதியர்), ஐ.ஆறுமுகம் (ரயில்வே ஓய்வூதியர்),திமுக., மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர், முன்னாள் கவுன்சிலர் என்.பூவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.நாகராஜன்,து.ராமகிருஷ்ணன் ((ரயில்வே ஓய்வூதியர்), தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மேலாளர் என்.முருகேசன், மடி மேஸ்திரி ஜடாமுனி (எ) ராஜேந்திரன், களஞ்சியம் நகர் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் என்.செல்வ களஞ்சியம், இந்திய கடலோரக் காவல் படை ஊழியர்கள் கே.என்.முருகேசன், மாலி (எ) கே.என்.முனியசாமி, துறைமுக பணியாளர் (ஓய்வு) களஞ்சியம், என்.நாகநாதன், என்.போது அய்யப்பன், சுரேஷ் (எ) து.குமரேசன், முனியசாமி, இளைஞரணி நிர்வாகிகள் இது.பாலாசுப்ரமணியன், ராஜா (எ) திருநாவுக்கரசு, பூ. நம்பு வேணு, பூ. நம்பு வெங்கடேஸ்வரன், இ.து.மகேஸ்வரன், எஸ்.என்.விக்னேஸ்வரன், நவீன் (எ) கற்பக பாண்டியன், க.விக்னேஷ், க.ஜெயபிரகாஷ்எம்.கார்த்திக் ராஜா, ஐ.சஞ்சய், ச.கோகுல், ச.பிரதாப், க.சு.மு.வருண் வசந்தன், க.சு.மு.பொன்னிலவன் உள்பட விழா ஏற்பாடுகளை செய்தனர். அக்.8ல் குளுமை பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image