நெல்லை வீரத்தம்பதி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவ குற்றவாளிகள் குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தில் முதியவர்களை தாக்கி நடைபெற்ற கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக 03.10.19 பிற்பகல் 12 மணி அளவில் நெல்லை மாவட்ட (எஸ்.பி) காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கொள்ளை சம்பவம் மற்றும் குற்றவாளிகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.நெல்லை வீர தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நெல்லை எஸ்.பி. அருண் சக்திகுமார் பேட்டியின் போது கூறினார்.

நெல்லை மாவட்டம் கடையம் வீர தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி வழக்கில்  கீழகடையம் பாலமுருகன்(30),  சவலாப்பேரி பெருமாள் (54) ஆகியவர்கள் கைது செய்யப்பட்டனர்.கொள்ளையர்களிடம் இருந்து 35 கிராம் தங்க தாலி செயின், 2 அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினை விசாரிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெருமாள் மீது 8 வழக்கும்,பாலமுருகன் மீது 30 வழக்குகள் உள்ளது.மேலும் 2 நாட்களுக்கு முன்னரே நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க உதவியாக இருந்து திறம்பட செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image