காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் கண்டிராதித்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கண்டிராதித்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 02.10.2019 இன்று காலை 11 மணியளவில் கண்டிராதித்தம் சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.இந்த கிராமசபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி ராசா ஊராட்சி செயலாளர் தங்க துரை மற்றும் கிராம பொதுமக்கள் 112 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை,குடிநீர் சிக்கனம், சுகாதாரம்,கிராம வளர்ச்சி,மழைநீர் சேகரிப்பு,ப்ளாஸ்டிக் உற்பத்தி தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் அது குறித்து 22 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சமூக சட்ட ஆர்வலர் வரதராஜன் கலந்து கொண்டார்.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image