ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் வீரசிகாமணி ஊராட்சியில் பனைவிதை நடும் விழா

தமிழகம் முழுவதும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இலக்கில்லா வகையில் விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் வீரசிகாமணி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பனைவிதை நடும் விழா 22.09.19 ஞாயிறு காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.வீரசிகாமணி ஊரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்கியபேரி குளத்தின் கரையில் இயற்கை ஆர்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து இலக்கில்லா பனை விதை விதைப்பு பணியின் கீழ் பனை விதை விதைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டியன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன்,பணி மேற்பார்வையாளர் ராமர்,ஊராட்சி செயலர் லட்சுமணன் ஆகியோர் தலைமையில் 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.பனை விதை நடும் விழாவில் ஜீவன் பொது நல இயக்கம், தளிர் இயக்கம், கலாமின் கனவுகள், KNCC குழு , சொசைட்டி ஆஃப் ஏரோனாடிக்கல் இன்ஜினியர்ஸ் குழு ஆகிய சமூக நல தன்னார்வ அமைப்பினர் மற்றும் கீழவீரசிகாமணி ராஜாத்தி, பொய்கை ஊராட்சி ராஜேஸ்வரி, வீரசிகாமணி மாரியப்பன் மற்றும் இப்பகுதி பொதுமக்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர்.இந்நிகழ்வில் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும்,சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் இயற்கை ஆர்வலர்கள் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வின் இறுதியில் ஜீவன் பொது நல இயக்கம் சார்பாக ரஜினி நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image