ஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் சார்பில் ஆய்வு கூட்டம், சேவை திட்டம் வழங்கும் விழா உச்சிப்புளியில் நடந்தது. தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். வட்டாரத்தலைவர் ஸ்டான்லி, மண்டலத் தலைவர் சுப்ரமணியன், அரிமா சங்க நிர்வாகிகள் பொன்னுச்சாமி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிடாவலசை துவக்கப்பள்ளிக்கு வைபி கலர் பிரின்டர் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கோமகன், ஆசிரியர் திருமேனி நாயகம், கிராமத் தலைவர் ரவி, கிராமக் கல்வி குழு தலைவர் மலை ராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்து பெற்றுக் கொண்டனர். பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நாராயண மூர்த்தி நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..