கடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்களை மாற்றி பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பள்ளியில் ஆண்களை ஆசிரியர்களாக நியமிப்பதால் ஏற்படும் அவலங்கள்,விளைவுகள், சீர்கேடுகள் குறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி விளக்கி பேசினார்.அவர் கூறும் போது கடையநல்லூர் இன்னொரு பொள்ளாச்சியாக மாறிவிடக்கூடாது.அதற்கு முன்பே இந்த பள்ளியின் அவலத்தை போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பெண்கள் பயிலும் பள்ளியில் தகுதியான பெண் ஆசிரியைகள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றார்.இந்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் டி எஸ் எஸ் மணி,அருள்ராஜ் வழக்கறிஞர், பொன்னுத்தாய் பெண்கள் அமைப்பு மற்றும் திரளான பெண்கள் அமைப்பினர் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சியினர் என அனைவரும் கலந்துகொண்ட நிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆண்கள் தலைமை ஆசிரியர்களாகவும் பெண்கள் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் சாதாரண ஆசிரியைகளாக இருக்கும் நிலையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பெண்கள் அமைப்பினர் கூறுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பெண்கள் பள்ளியின் விஷயத்தில் தகுதி வாய்ந்த பெண் தலைமை ஆசிரியை,ஆசிரியைகள், பணியாட்கள் என முழுவதுமே பெண்களை நியமித்து தவறுகள் நடக்கும் முன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள்,சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..