தரமற்ற முறையில் செயல்படும் தனியாா் இரத்த பாிசோதனை நிலையம்

மதுரை மாவட்டம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள சலவை நிலையத்தில் ரத்தப் பரிசோதனை செய்வது ரத்த வகைகள் பார்த்து கூறுவது போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மேலும் சுகாதாரமற்ற முறையில் ரத்தப் பரிசோதனை செய்வதும் ரத்த வகைகளை சாதாரண துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என தெரியவில்லை. இரத்த பரிசோதனை நிலையத்திற்கு என்று பல விதிமுறைகள் உள்ளது. அதையெல்லாம் பின்பற்றாமல் தூசி பறக்கும் சாலையில் பஞ்சு மற்றும் ஊசிகளை வைத்து ரத்த மாதிரிகளை பரிசோதித்து சொல்வது நடைபெற்று வருகிறது.  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..