கடலில் விபத்தில் சிக்கிய புதுமடம் மீனவரை மருத்துவமனையில் நலம் விசாரித்த SDPI கட்சியினர்…

புதுமடம் கடலில் வல்லம் தடம் புரண்டதில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதுமடத்தை சார்ந்த முகம்மது அலியை SDPI கட்சியின் சார்பாக நிர்வாகிகள் நேரில் சந்தித்து. அவரின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

மேலும் மீனவர் என்ற அடிப்படையில் விபத்து நிவாரணம் இவருக்கு அரசு வழங்க வேண்டும் என SDPI சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் SDPI கட்சியின் தொகுதி தலைவர் ஹசன் அலி, பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் ரியாஸ் கான், SDPI உச்சிப்புளி நகர் செயலாளர் அகமது பஷீர், SDPI முன்னாள் மாவட்ட செயலாளர் அஜ்மல் சரீப் மற்றும் SDPI செயல்வீரர் சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..