Home செய்திகள் சிறப்பு கிராமசபைக் கூட்டம். மத்திய அரசின் போஷன் அப்பியான் திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறப்பு கிராமசபைக் கூட்டம். மத்திய அரசின் போஷன் அப்பியான் திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

by mohan

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  ஒன்றியத்தில் மத்திய அரசின் ஊட்ட சத்து இயக்கம் ( போஷன் அப்பியான்) திட்டம் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் மலர் விழி உத்திரவு பிறப்பிந்தார் அதனை தொடர்ந்து பாலக்கோடு ஊராட்சிகளில் உள்ள எர்ரனஅள்ளி ஊராட்சி, தண்டு காரண அள்ளி ஊராட்சி, பிக்கனஅள்ளி ஊராட்சி, கெர்தலாவ் ஊராட்சி, சிக்க மாரண்டஅள்ளி ஊராட்சி உள்ளிட்ட 32 ஊராட்சிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெளரி, தனபால் ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது இக் கூட்டத்தில் பெண்கள் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் தன் சுத்தம் சாப்பிடுவதற்க்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் சோப்புக்களை கொண்டு சுத்தமாக கைகளை கழுவ வேண்டும் திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும், உணவுடன் காய்கறிகள் கீரைகள், பழங்கள் கொட்டை வகைகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும் போதுமான அளவிற்க்கு அயோடின் உப்பு பயன்படுத்த வேண்டும் மேலும் கர்ப்பிணிகள் தங்கள் பெயர்களை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொண்டு அவர்கள் வழங்கும் ஊட்டசத்து மாத்திரைகளை முறையாக உட்கொள்ள வேண்டும் மேலும் அங்கன்வாடி மையத்திலுள்ள வழங்கும் ஊட்டசத்து மாவு உருண்டைகளை குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் நோய்களை தவிர்க்க நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குடிக்க வேண்டும் போன்றவற்றை பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டு பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்குணசேகரன், ருத்தரையன், சண்முகம், சரத்குமார் ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர்கள் சண்முகம், பவுன்ராஜ், லட்சுமணன், கோபால், சஞ்சீவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!