உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டி மாரியம்மன் கோவிலில் மழைவேண்டி கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 1 வார்டு பகுதியான மாமரத்துப்பட்டியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் ஆவணி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று கிராமம் செழிக்கவும், மழை பெய்யவேண்டியும் கிராம மக்கள் ஒன்றினைந்து முளைப்பாரியை தலையில் சுமந்தபடியே உசிலம்பட்டியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு எடுத்து சென்று வழிபட்டனர். இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..